முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்


கல்வியாளர்கள் வேதனை

"பெற்றோர், தனியார் பள்ளிகளை தேடிச் செல்வது, துரதிஷ்டமானது, தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப வேண்டிய சூழலில் உள்ளோம்" என, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.

தமிழக குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து, "அசர்&' என்ற தனியார்அமைப்புநடத்திய ஆய்வறிக்கையின் வெளியீட்டு விழாசென்னைமியூசிக் அகடமியில் நடந்ததுஇதில்இந்து நாளிதழ் ஆசிரியர்,சித்தார்த் வரதராஜன்கல்வியாளர் ராஜகோபால்எழுத்தாளர் ஞானி,மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன்முன்னாள்துணைவேந்தர்வசந்திதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில்வசந்திதேவி பேசியதாவதுதமிழக குழந்தைகளின் கல்வித்திறன் குறைந்து வருவதுநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுகுழந்தைகள் கல்வி குறித்து,வரும்ஆய்வறிக்கைகளே அதற்கான சாட்சி.
தற்போது வெளி வந்துள்ள அறிக்கையின் படிதமிழகத்தில் மட்டுமல்லநாடு முழுக்கபெற்றோர்தங்கள்குழந்தைகளைதனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கேமுன்னுரிமை கொடுக்கின்றனர்இது தவறானது.
தனியார் பள்ளிகளில் பயிலும்மாணவர்களின் கல்வித் தரத்தை விடஅரசு பள்ளிகளில் பயிலும்மாணவர்களின் கல்வி தரம்எந்த வகையிலும் குறைந்தது இல்லைஅனைத்து பெற்றோரும்தங்கள்குழந்தைகள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்துதனியார் பள்ளிகளில்சேர்க்கின்றனர்ஆனால்அப்பள்ளிகள்குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில்லை.
தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையின் படிஒன்றாம் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால்மட்டுமேதமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீதகுழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.
5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது.தமிழை தாய்மொழியாக கொண்டதமிழகத்தில்தமிழ் எழுத்துக்களை கூடமாணவர்களால்வாசிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர் எனில்தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்துநாம்கேள்வி எழுப்ப வேண்டிய சூழலில் உள்ளோம்.
மயக்கத்தில் இருந்துபெற்றோர் தெளிவு பெற வேண்டும்அவர்கள் தனியார் பள்ளிகளைதேடிச் செல்வதுதுரதிஷ்டமானது.இவ்வாறு அவர் பேசினார்.