முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி


தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள்மூன்று மாதங்களில்முடிவடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும்மின்னணு முறையில்மாற்றப்பட்டு வருகிறதுஇதனால்அரசின் தகவல்பரிமாற்றங்களைக் கூடமின்னணு முறையில் மேற்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காகதமிழக ஏரியா நெட்வொர்க்தமிழக டேட்டா மையம்மின்னணு மாவட்டத் திட்டம்மாநிலசேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களைதமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களைமாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால்அலுவலகங்களைஇணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுமேலும்அலுவலகத்தின் அன்றாடப்பணிகளைமின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
பல சேவைகளைஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால்இணையதள இணைப்புகள்அவசியமாகின்றனஎனவேதமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும்இணையதள வசதியைஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றோடுஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும்இணையதள வசதிஏற்படுத்தப்படுகிறதுஇணையதள வசதியோடுஒவ்வொரு துறை அலுவலகங்களும்வங்கிகளைப் போல,கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.
இதற்காகஅரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும்ஒப்பந்தப் புள்ளியை,எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும்தரை வழி தொலைபேசி இணைப்புடன்,பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல்தரை வழி தொலைபேசிக்குஇலவச உள் அழைப்பு வசதி மட்டும்இருக்கும் வகையில்இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்துதமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவதுஅனைத்து அலுவலகங்களும்இணையதளவசதி பெறும் போதுதகவல் பரிமாற்றம் எளிதாவதோடுஅரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை,இணைய தளம் மூலம்உடனுக்குடன் அறிய முடியும்.
நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூடமக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்கமுடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டுமூன்று மாதங்களில்,அனைத்து அலுவலகங்களிலும்இணையதள வசதி அளிக்கப்படும் எனஎல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.