அரசு உதவி பெறும் பள்ளிகளில் டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது எனவும், பதவி உயர்வு அளிக்க கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை பட்டம் பெற்றவர்கள், டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் ஒரு வருடத்தில் பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி.கணிதம் போன்ற இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பணி மற்றும் பதவி உயர்வு பெற்று வந்தனர். இதனால் 3 வருட கோர்சில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து 3 வருட கோர்சில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் ஒரு வருடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மற்றும் பதவி உயர்வு வழங்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் இளங்கலை பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோல் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட்ட பணியிடங்களிலும் டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் பட்டம் பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் ஐகோர்ட் உத்தரவுப்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் டபுள் டிகிரி கோர்ஸ் மூலம் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது எனவும், பதவி உயர்வு அளிக்க கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.