முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அட்சயப் பாத்திரம் திட்டம் எப்போது செயல்படும் ?


         தமிழகத்தில்உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடம்சமுதாயஏற்றதாழ்வு உள்ளதாக எழுந்த புகாரை களையும் வகையில்,அனைத்து பள்ளிகளிலும் "அட்சய பாத்திரம்" திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில்அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அறையிலோ,சத்துணவு மையம் முன்போ "அட்சய பாத்திரம்" எனஎழுதிய ஒருபாத்திரத்தை வைக்க வேண்டும்அப்பள்ளியில் படிக்கும்மாணவர்கள்தினமும் வீட்டில் இருந்து ஏதேனும் ஒரு காய் கொண்டுவந்து இப்பாத்திரத்தில் இட வேண்டும்.
மறுநாள் சமைக்கும் போதுஅட்சய பாத்திரத்தில் உள்ள காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்பாத்திரத்தில்எந்த மாணவர் காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியாமல்ரகசியமாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றிய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனால்பள்ளிகளில் அட்சய பாத்திரம் வைப்பது குறித்து பள்ளி கல்வி துறை சார்பில் எவ்வித அறிவிப்பும்வெளியாகாததால்இதை செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால்ஒன்றிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்றியத்துக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "அட்சயபாத்திரம்" திட்டம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சத்துணவு தயாரிப்பதற்குதேவையான காய்கறிகள் கொண்டு வந்து அட்சய பாத்திரத்தில் வழங்கவும்மாணவர்கள் தங்களுக்குள்பகிர்ந்து கொள்ளுதல்பொதுமக்களின் சமூக பங்களிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு,நடைமுறைப்படுத்தும் திட்டம்.
திட்டத்தின் நோக்கம் குறித்து ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு உண்ணும்மாணவர்கள் தெரிந்து கொள்ளவும்அவர்களை பங்கு பெற செய்யவும் அனைத்து பள்ளி சத்துணவுஅமைப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்இதுகுறித்த நடவடிக்கையை ஒன்றியம்நகராட்சிஅதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்இவ்வாறுசுற்றிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் சார்பில் வந்துள்ள அறிக்கையை அந்தந்த உதவிதுவக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்அந்தந்தஉள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்புடன்அட்சய பாத்திரம் வாங்கி, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்துஇத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றனர்.