முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:
பாடம்

முந்தைய காலியிடங்கள்

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்

இப்போதைய காலியிடங்கள்

தமிழ்

2,298

1845

483

ஆங்கிலம்

4,826

3001

1825

கணிதம்

2664

1365

1299

இயற்பியல்

1454

410

1044

வேதியியல்

1453

643

810

தாவரவியல்

625

62

563

விலங்கியல்

622

74

548

வரலாறு

4304

1182

3122

புவியியல்

1076

75

1001

சிறுபான்மை மொழி

110

91

19

மொத்தம்

19432

8718

10714