முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கார்ட்டூன் வடிவத்தில் பாடங்கள்: மாணவர்களை கவர புதிய முயற்சி


கணிதம், அறிவியல் என்றால் அலறி ஓடும் மாணவர்களுக்கு அதன் அடிப்படை அறிவை எளிமையாகவும், உறுதியாகவும் கற்றுத்தர கார்டூன் வடிவில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஏன்ஸ்ட் யங் பவுண்டேஷன் சார்பில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களும் கார்ட்டூன்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்கள் ஆர்வத்துடன் எளிதாக பாடங்களை புரிந்து படிப்பார்கள் இதனால் மனப்பாடம் செய்து தேர்வில், பங்கேற்காமல் புரிந்து படிப்பார்கள். கல்வியின் தரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வட்டாரத்தில், 10 பள்ளிகள் வீதம் 22 வட்டாரங்களில் 220 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கடந்த 2 நாட்களாக 4 பிரிவுகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கார்ட்டூன் அடங்கிய "சிடி&'க்கள் பயிற்சிகளின் போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த "சிடி"க்களில் சீனு, மீனு, பஸ் (ஈ) மற்றும் ஸ்கேல் என்ற 4 கார்ட்டூன் உருவங்கள் மூலம் பாடங்கள் விளக்கப்படுகிறது. இதில் பஸ் (ஈ) என்று கூறப்படும் கார்ட்டூன், சிந்தனைகளை தூண்டும் விதமாக கேள்விகளை எழுப்புகின்றது.

மாணவர்களில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக கார்ட்டூன் விளக்கப்படம் வண்ண மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை கற்றல் முறை டில்லி, புனே உள்ளிட்ட வட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்தில் கோவையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

தற்போது "சிடி"க்கள் எளிமையான ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஏன்ஸ்ட் யங் பவுண்டேஷன் சார்பில், தமிழ் மொழிப்பெயர்ப்பும் செய்யப்பட உள்ளது. இவ்வகை கற்றல் மூலம் கல்வித்தரம் உயரும் என்பதில் எவ்வகை ஐயமும் இல்லை.

இதுகுறித்து, கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி கூறியதாவது: கார்ட்டூன் "சிடி" முறையில் கற்றல் முறை மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநீற்றலை தவிர்க்கவும் இத்தகு கற்றல் முறை உதவும். 

கணிதம், அறிவியல் பாடங்கள் என்றால் மாணவர்கள் மிரண்டு ஓடுவார்கள். இப்பாடங்களில் அடிப்படை அறிவு குறைபாட்டால் பல மாணவர்கள் வேலைவாய்பிற்கு தகுதியின்றி போகின்றனர். 

இந்த கற்றல் முறை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை அரசு பள்ளிகளில் உருவாக்கும். ஏன்ஸ்ட் யங் பவுண்டேசன் என்ற அமைப்புடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு முன்பு ஆங்கில புலமையை மேம்படுத்த அரசு பள்ளிகளில் சிடிக்கள் வழங்கப்பட்டன. 

ஆனால், பாட புத்தகங்களில் உள்ள பாடங்களை கார்ட்டூன் வடிவில் தொகுத்து கொடுப்பது இதுவே முதல்முறை. ஆசிரியர்களுக்கு இந்த "சிடி&'க்கள் பயன்படுத்துவது குறித்தும், கற்றல் சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்றவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி தரம் இதன் மூலம் உயரும் என்றார்.