ஆம் அமெரிக்காவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையை சிறுவன் ஒருவன் கடந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு குதிரை வண்டி அதி வேகமாக அவனை கடந்து சென்றது.
சிறுவன் மயிரிழையில் உயிர் தப்பினான். ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானான்.
மோட்டர் வண்டிகள் இல்லாத அந்த காலத்திலும் குதிரை வண்டிகள் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் பயணிகள் வேகமாக செல்லும் குதிரை வண்டிகளால் அடிக்கடி விபத்திற்குள்ளாகினர். இதனால் இந்த விபத்துகளை தடுக்க ஒரு எச்சரிக்கை கருவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த சிறுவன் நினைத்தான்.
உடனே கடினமாக உழைத்து மணி போல ஒரு கருவியை உருவாக்கினான். அந்த கருவியிலிருந்து கணீரென்று ஒலி வந்தது. இதுதான் அவனின் முதல் கண்டுபிடிப்பு. அதை குதிரை வண்டிகளில் எச்சரிக்கை மணி போல பொருத்தினான்.
சிறுவனின் தொடர் ஆராய்ச்சியால் உருவானது தான் பாதுகாப்புக் குண்டூசியும், ஊற்றுப் பேனாவும். இந்த சிறுவன் தான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரான வால்டர் ஹன்ட்.