முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு


  பல்கலைகளில் செயல்பட்டு வரும், அகடமி ஸ்டாப் காலேஜ் - ஏ.எஸ்.சி., மையங்களின் பெயரை, ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் சென்டர் - எச்.ஆர்.டி.சி., என, மாற்ற வேண்டும். தற்போதுள்ள, 66 மையங்களை, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், 100 ஆக உயர்த்த வேண்டும். இந்த மையங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற, நிபுணர் குழுவின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும், தேர்வு செய்யப்பட்ட, 66 பல்கலைகளில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரக் குழுவின் சார்பில், ஏ.எஸ்.சி., மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் என, மூன்று தரப்பினருக்கும், அவரவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பணியை, ஏ.எஸ்.சி., மையங்கள் செய்து வருகின்றன.

தேசிய கவுன்சில்இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மையங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, உரிய பரிந்துரைகளை அளிக்க, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை, யு.ஜி.சி., அமைத்தது. இக்குழு, 2011, டிசம்பர் முதல், ஜூன் வரை, 66 மையங்களிலும் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கும், யு.ஜி.சி.,க்கும், பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்களை, சமீபத்தில், தேசிய ஆலோசனை கவுன்சில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த நோக்கங்களுக்காக ஏ.எஸ்.சி., மையங்கள் அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 13 மையங்கள் தான் செயல்பட்டுள்ளன. ஏழு மையங்கள் செயலிழந்து விட்டன; மற்ற மையங்கள், ஓரளவுக்கு செயல்படுகின்றன.

மையங்களில், நிரந்தர பணியாளர்கள் இல்லாதது, இயக்குனர் பணியிடமே, பல மையங்களில் காலியாக இருப்பது, அனைத்து வகையான பயிற்சிகளையும் முழுமையாக அளிக்காதது போன்ற குறைகள் அதிகம் உள்ளன.

சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன் மற்றும் மதுரை காமராஜர் ஆகிய, நான்கு பல்கலைகளில், ஏ.எஸ்.சி., மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பாரதிதாசன் பல்கலை மையம், சுத்தமாகச் செயல்படவில்லை என, ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, நிபுணர் குழு உறுப்பினரும், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தருமான எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:எந்த பல்கலையையும் குற்றம்சாட்டாமல், அந்த பல்கலையில் உள்ள மையத்தை வலுப்படுத்துவது குறித்து பேச வேண்டும். நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும், 2012 - 17க்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்படும்.மனிதவள மேம்பாட்டு மையங்கள் வலுப்படுத்தப்பட்டால், உயர்கல்வியின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.