கல்வி என்பது தெரியாததைதத் தெரிந்து கொள்வது அல்ல; வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது.
- ஜான் ரஸ்கின்
கல்வியின் குறிக்கோள் வாழ்க்கை முழுவதும் ஒருவரைப் பாடம் கற்கச் சொல்லிக் கொடுப்பது.
- ராபர்ட் ஹட்சின்ஸ்
கல்வி என்பது பிறக்கும்போது தொடங்குவது... இறக்கும்போது முடிவது.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
கல்வி என்பது...விவேகானந்தரின் வாக்கு
கல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்