பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்; எவ்வாறு பாடங்களை படிக்க வேண்டும்; கேள்விக்குரிய பதில்களை எவ்வாறு எழுத வேண்டும் என ஆசிரியர்கள் "டிப்ஸ்' வழங்கினர்.
அவற்றை, மாணவ, மாணவியர் கவனமாக கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், கோவை தியாகி என்.ஜி., ராமசாமி மெமோ ரியல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். மாணவ, மாணவியர் கவனமாக கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டனர். "உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்' என்ற தலைப்பில் மனநலம் சம்பந்தப்பட்ட புத்தகம், தேர்வில் வரும் முக்கிய கேள்வி கள் மற்றும் புளுபிரின்ட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. காயத்ரி (தமிழ் முதல் தாள்): சமச்சீர் கல்வி அமல்படுத்தி இருந்தாலும், பழைய தேர்வு அடிப்படையிலேயே தமிழில் வினாக்கள் அமைகின்றன. தமிழில் நூற்றுக்கு நூறு பெற முடியாது என்ற நிலை மாறிவிட்டது. ஒரு மதிப்பெண் வினாக் கள், விடைக்கான வினாவை தேர்ந்தெடுத்தல், குறு வினா, சிறு வினாக்களுக்கு சரியாக பதில் அளித்தாலே, எளிதாக 60 மதிப்பெண் பெறலாம். செய்யுள் பகுதியில் 55 மதிப்பெண்; உரைநடையில் 45 மதிப்பெண் அடிப்படையிலேயே வினாக்கள் கேட்கப்படும். வினாக்களை தேர்வு செய்வதில் மிக கவனம் தேவை. குறு வினாக்களில், யாவை? எத்தனை? எவை? என்ற அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளை தேர்ந்தெடுத்தால், சுலபமாக விடையளிக்கலாம். திருக்குறளில் இருந்து கண்டிப்பாக அதிகளவு கேள்விகள் வரும். ஒவ்வொரு குறளையும் எழுதிப்பார்த்து, மனதில் பதிந்தால், நெடுவினாக்களுக்கு எளிதாக பதிலளிக்கலாம். மனப்பாட பகுதிகளை படிக்கும்போது, ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்புகளையும் சேர்த்து படித்து வைத்துக் கொள்ள வேண்டும்; ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்க ஏதுவாக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும், சந்தி, ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் இன்றி சரியாக பதில் எழுதினால், நிச்சயம் தமிழில் "சென்டம்' பெறலாம். சுமதி (தமிழ் இரண்டாம் தாள்): இலக்கணத்தை முழுமையாக படித்தால் தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். அசை பிரித்தல், அணிகள், பொழுதுகள், வல்லினம் மிகும், மிகா இடங்கள், சந்திப்பிழை நீக்கம் போன்றவற்றை நன்றாக படிக்க வேண்டும். இவற்றை படித்தால், 2, 5 மதிப்பெண் வினாக்களை எளிதாக சந்திக்கலாம். துணைப்பாடத்தில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., வரலாறுகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. கவிதை பகுதியில், இயற்கை காட்சி, மழை, கடல், வானம் குறித்து கேள்விகள் இடம் பெறும்; 8 வரிகளுக்கு மிகாமல் மட்டுமே கவிதை எழுத வேண்டும். பிரிவு 5ல் பாடல் கொடுத்து சிறந்த கருத்து எழுதும் கேள்வியில், 2 அல்லது 3 வரிகளில் மையக்கருத்து, அதில் இடம் பெறும் எதுகை, மோனைகளை பிரித்து எழுத வேண்டும். நெடுவினாக்கள் எழுதும்போது, தலைப்பு, முன்னுரை, துணை தலைப்பு, முடிவுரைகள் மிக அவசியம். தேவைப்பட்டால் திருக்குறள், பழமொழிகளை மேற்கொள் இட்டு காண்பித்தல் வேண்டும். இதன் மூலம், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெற்று, அதிக மதிப்பெண் பெறலாம்.