இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை வழங்கும் வரை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் காமராஜ் கூறியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் மத்திய அரசு வழங்கிய ஊதியத்திற்கு இணையாக தமிழகத்திலும் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கான சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்., 15ம் தேதி முதல் நவ.,12ம் தேதி வரை மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்த உள்ளனர். மேலும் தமிழக அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கூறியுள்ளார்.