தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.