சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, அரியலூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சி , கடலூர் , நீலகரி உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமறை கடந்த 16ம் தேதி துவங்கியதை தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களுக்கு இது வரை 21 பேர் பலியாகியுள்ளனர். நிவாரண பணிகளுக்கு அரசு தயார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மழை காரணமாக ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பலத்த மழை காரணமா நீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் காஞ்சிபுரம், கடலூர், நாகை , நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( திங்கட்கிழமை ) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை:
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது. காரைக்கால் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.