முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் தவிப்பு

திருப்பூர் : இடம் மாறுதல் பெற்று இரண்டு மாதங்களாகியும் இன்னும் சம்பளம் வழங்கப்படாததால், பட்டதாரி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரிந்த உபரி ஆசிரியர்கள், மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மாவட்டம்தோறும், கடந்த ஜூலை மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் "கவுன்சிலிங்' நடத்தப்பட்டு, இடம் மாறுதல் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த உபரி ஆசிரியர்கள் 99, 1,250 புதிய ஆசிரியர் பணியிடங்கள் "கவுன்சிலிங்' மூலம் நிரப்பப்பட்டன. இடம் மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஜூலை 26 முதல் புதிய பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இடம் மாறுதல் பெற்று இரண்டு மாதங்களாகியும், மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்துக்குள் இடம் மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவர் - ஆசிரியர் விகிதாசார அடிப்படையில் பணி நிரவல் "கவுன்சிலிங்' நடத்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் வழங்கப்பட்டது. பணியிடம் மாறுதல் பெற்று வேறு மாவட்டம், வேறு பள்ளிகளுக்கு இடம் மாறிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. போக்குவரத்து செலவு, குடும்ப செலவினங்களை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்,' என்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்டபோது, ""பல்வேறு மாவட்டங்களில் இருந்து இடம் மாறுதல் பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர்கள், உபரி ஆசிரியர்களுக்கு பணியிடம் மாறுதல் பெற்றது முதல், தற்போது வரையிலான சம்பளம் வழங்க வேண்டும். இடம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. தற்போது ஆசிரியர்களுக்கு படிப்படியாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது; விரைவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும்,'' என்றா