விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.