முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு: மாநிலம் முழுவதும் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.