திருச்சி கோளரங்கத்தில் வரும் நவம்பர் நான்காம் தேதி நடைபெறவுள்ள 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் திறனறிவுப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரம் காலை 10 முதல் காலை 11.30 மணி வரை. கேள்விகள் பொது அறிவியல் மற்றும் தமிழக அரசு பாடத்திட்டத்தின் சமசீர் கல்வி முறை அடிப்படையிலும் நடைபெறும். வினாத்தாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அமைந்திருக்கும். போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் ரூ. 20 கட்டணமாக செலுத்தி வரும் அக்டோபர் 31 ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2332190, 2331921 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.