சென்னை: ஐ.ஏ.எஸ். தேர்விற்காக அரசு பயிற்சி மையங்களின் மூலம் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கான தொகையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது உணவிற்காக வழங்கப்பட்டு வரும் தொகை 1,200 ரூபாயில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், முதனிலை தேர்வில் வெற்றி பெற்று டில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரம் வீதம் 200 மாணவர்களுக்கு வழங்கப்படும், அவர்கள் டில்லி செல்ல பயணச் செலவாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்திய தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.