சென்னை, ஜூலை 2: பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் மற்றும் அறிவுக் களஞ்சிய விருதுகள் வழங்கும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) சென்னையில் நடைபெற உள்ளது.
எம்.டி.எஸ். அகாதெமி மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் இப்போட்டிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
பாடல்கள் ஒப்பித்தல், பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டி, தனி நடிப்பு, மாறுவேடப் போட்டி, இசை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அறிவுக் களஞ்சிய விருதுகள் வழங்கப்படும்.
மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் உள்ள எம்.டி.எஸ். அகாதெமியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2495 1415, 98847 30642 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.