பொதுக்கல்வி முறை மீண்டும் வருமா?
சென்னை : ''86வது சட்டத் திருத்தத்தின் பாதகமான கூறுகளை சரி செய்ய இந்திய அர சமைப்பு சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டும், கல்வி வணிக மயமாதலை தடுக்க வேண்டும்'' ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் 30ம் தேதி கல்வி மாநாடு நடக்கிறது. பொதுக்கல்விக்கான மாநில மேடையின் சார்பில் 2 நாள் அகில இந்திய கல்வி மாநாடு சென்னையில் நடத்தப் படுகிறது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது.
இதுகுறித்து மாநாட்டுக் குழு தலைவர் பேராசிரியர் ஷட்கோபால் கூறிய தாவது: 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி தர வேண்டும் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 4 பிரிவு 45 வலியுறுத்துகிறது. இந்த சட்டப்பிரிவு 2002ல் திருத்தப்பட்டது. அதன்படி, எந்த வகையில் கல்வியை தர விரும்புகிறதோ அந்த வகையில் கட்டாய இல வச கல்வியை தர வேண் டும் என்று அரசு கூறியது. மேலும், பிரிவு 51ஏ,ல்(கே) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற் படுத்தி கொடுக்க வேண் டிய கடமை பெற்றோருக்கு உண்டு என்று கூறப் பட்டது.
அரசுக்கு மட்டுமே இருந்த இந்த பொறுப்பு பெற்றோருக்கு மாற்றப் பட்டதன் மூலம் அரசு தன் பொறுப்பை கை கழுவ நினைக்கிறது.இதைத் தொடர்ந்து இயற்றப்பட்டதே 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம். அரு காமைப் பள்ளி, பொதுப் பள்ளி, தாய் மொழிக் கல்வி ஆகியவற்றுக்கு இந்த சட்டத்தில் இடம் இல்லை. இந்த சட்டம் குழந்தை களுக்கு முழுமை யான கல்வியை வழங்க மறுக்கிறது.
இது அரசுப் பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கல்வி வழங்கும் தன் பொறுப்பில் இருந்து படிப் படியாக அரசு விலகிக் கொள்ள முயற்சிக்கிறது. அரசால் தொடக்க கல்வியை தரமாக தர இயலாது என்பது ஏற்க முடியாது. எனவே 86வது சட்டத் திருத்தத்தின் பாதகமான கூறுகளை சரிசெய்ய இந்திய அர சமைப்பு சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டும். பொதுக் கல்வி முறையை கொண்டு வர வேண்டும். இதன் அடிப்படையில் தான் சென்னையில் 2 நாள் மாநாடு நடக்கிறது.இந்த மாநாட்டில் நடக்கும் பல்வேறு அமர்வுகளில் சர்வதேச கல்வியியல், இந்திய கல்வியியல் அறிஞர்கள், நீதிபதிகள் உள்பட 2000 பேர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.