முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


      கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ & மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ரூ 3000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
நடப்பாண்டு முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ & மாணவிகளில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எனவே, மார்ச் 2012ல் நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ & மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதனால் 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1168 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, சாதிச்சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்று நகல்களுடன் பிளஸ் 2 பயின்ற மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.