முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

ஆளுமைத்திறனை மேம்படுத்தும் கல்வி வேண்டும்: ரோசய்யா


 "கல்வி என்பது வகுப்பறைகளில்புத்தகங்களை பயில்வதுமட்டுமல்லஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்,'' என தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார்.

திருப்பூர் மாவட்டம்உடுமலை அருகே உள்ள அமராவதி நகர்சைனிக் பள்ளியில், 51ம் ஆண்டு விழா நேற்று நடந்ததுபள்ளிமுதல்வர் கேப்டன் சந்தீப் சக்கரவர்த்தி வரவேற்றார்மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி முன்னிலைவகித்தார்.
விழாவில்தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவதுராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்துபணியாற்றுவதற்குரிய அடித்தளத்தை உருவாக்குவதுடன்நாட்டை காப்பாற்றவெளிநாட்டவர்களின்அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சைனிக் பள்ளி செயல்பட்டுவருகிறது.
ராணுவம் நம் நாட்டின் பெருமைக்குரிய அடையாளம்இதை உங்களிடம் பார்க்கிறேன்அணிவகுப்புமரியாதை மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறதுகல்வி என்பது வகுப்பறைகளில்,புத்தகங்களை பயில்வது மட்டுமல்லஆளுமைத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நல்ல பள்ளி என்பது என்பது மாணவர்களை நல்ல வழியில்சரியான திசையில் வழிகாட்டிசெல்வதேயாகும்தேசிய பாதுகாப்பு கழகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதில், 24சைனிக் பள்ளிகளில்நான்கு பள்ளிகள் முக்கிய இடம் பெற்றுள்ளனஅதில்அமராவதி நகர் சைனிக்பள்ளியும் ஒன்று.
கடந்த 50 ஆண்டுகளில், 500 மாணவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளனர்மாணவர்கள் லட்சியத்தைவகுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்இவ்வாறு கவர்னர் ரோசய்யா பேசினார்.