முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம்


அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டுஇறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1 முதல், 8ம்வகுப்பு வரையிலான மாணவமாணவியருக்கு, 3ம் பருவ பாடப்புத்தகங்கள்அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்துஜனவரி 2ம்தேதிபள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்குகல்வித்துறைதிட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்குஇலவசமாக வழங்குவதற்காக, 2.5 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிமும்முரமாக நடந்து வருகிறது.இதற்கிடையேஅடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை,பாடநூல் கழகம் துவக்கி உள்ளது.
இதுகுறித்துபாடநூல் கழக நிர்வாக இயக்குனர்கோபால் கூறியதாவதுதற்போதுமூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில்தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல்,பிளஸ் 2 வரை, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் தேவை.
தற்போது, 12 சதவீத புத்தகங்கள்இருப்பு இருக்கின்றனமீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி,பொங்கலுக்கு முன்துவங்கும். 140 அச்சகங்களில்இந்தப் பணிகள் நடக்கும்அடுத்த ஆண்டுஏப்ரலில்,அச்சடிப்பு பணியை முடித்துமே மாதம்பள்ளிகளுக்கு அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.
ஜூன் மாதம்பள்ளிகள் திறந்ததும்மாணவமாணவியருக்குஇலவச பாடப் புத்தகங்கள் கிடைக்கும்வகையில்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅமைச்சர் உத்தரவிட்டுள்ளார்அதன்படிபணிகள் நடந்துவருகின்றனஅடுத்த ஆண்டு, 9ம் வகுப்பிற்குமுப்பருவ கல்வி முறை திட்டம்அமலுக்கு வருகிறது.இதற்குபாட வாரியாக, "சிடி&'க்கள்வந்து கொண்டிருக்கின்றன.
ஒன்று முதல், 8ம் வகுப்பு வரைஒவ்வொரு பருவத்திற்கும்இரண்டு புத்தகங்களாக வழங்குகிறோம். 9ம்வகுப்பிற்குபாடத் திட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால்மூன்று புத்தகங்களாக வழங்கலாமா என,ஆலோசித்து வருகிறோம்புத்தகங்களின் விலையில்எந்த மாற்றமும் இருக்காதுஇவ்வாறு கோபால்தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவமாணவியருக்கு, 80பக்கங்கள் கொண்டஅட்லஸ் புத்தகங்கள்இலவசமாக வழங்கப்படுகின்றனபல்வேறு தகவல் புதையல்கொண்ட இந்த புத்தகங்கள்தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்தரமானதாகபாடநூல்கழகம் உருவாக்கிஉள்ளது.
நடப்பாண்டில்அட்லஸ் பெறும் மாணவமாணவியருக்குஅடுத்த ஆண்டுமீண்டும் வழங்கப்பட மாட்டாதுஅடுத்த ஆண்டில் இருந்து, 6ம் வகுப்பு மாணவமாணவியருக்கு மட்டும்இலவச அட்லஸ் வழங்கப்படும்எனபாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.