நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ஹைதராபாத்திலுள்ள தி இங்கிலீஷ் அண்ட் ஃபாரின் லேங்குவேஜஸ் யுனிவர்சிட்டி நடத்தும் தொலைநிலைக் கல்வி படிப்பில் சேர்ந்து ஆங்கிலம் படிக்க விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு (எம்.ஏ. இங்கிலீஷ்) படிக்க விரும்புபவர்கள், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கான படிப்பு இது. பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 31.10.2012.
ஆங்கில ஆசிரியர்களுக்கான (டீச்சிங் ஆஃப் இங்கிலீஷ்) முதுநிலை சான்றிதழ் படிப்புக்கு, ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புக் காலம் ஓராண்டு. பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 28.02.2013.
ஆங்கில ஆசிரியர்களுக்கான (டீச்சிங் ஆஃப் இங்கிலீஷ்) முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, இப்பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கான முதுநிலை சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு கால படிப்பு இது. பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 31.10.2012.
இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள், EFL University, Hyderabad - 500 605' என்ற பெயரில் ரூ.500-க்கான வங்கி வரைவோலை (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250) எடுத்து Dean, School of Distance Education, The English and Foreign Languages University, Hyderabad - 500 605 என்ற முகவரிக்கு எழுதி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விவரங்களுக்கு: www.efluniversity.ac.in
(Please Check & Clear for own risk this matter)