தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட்., எம்.எட். படிப்புகளின் மறுமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
இது குறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட்., எம்.எட். படிப்புகளின் மறுமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 5-ல் வெளியிடப் படுகின்றன.
தேர்வில் தவறியவர்கள் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள துறைத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது பல்கலைக்கழகத்தின் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 29ம் தேதிக்குள் உரிய கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும். அபராத கட்டணத்துடன் நவம்பர் 7ம் தேதிக்குள் அனுப்பலாம்.