ஆசிரியர் பணி என்பது அர்ப்பணிப்பும் தியாகமும் சேர்ந்த பணியாகும்.
நாளைய உலகை உருவாக்க இன்றைய சிறார்களை வடிவமைக்கும் அற்புதப் பணி.

இப்பணியில் இருக்கும் உலக ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
***
இன்று இந்தியாவில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வேறுபாடு வந்த பின் கல்வி வணிகமாகி விட்டது. சாதாரணப் பாமரனுக்கு எட்டாக்கனியாகி விட்டன தனியார் பள்ளிகள். அவர்களுக்கு ஒரே புகலிடம் அரசுப் பள்ளிகள்தாம்.
ஆனால் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ஏனோதானோவென்றுதான் பாடம் நடத்துவார்கள்; தனியார்ப் பள்ளிகளில் மட்டுமே சிறப்புக் கவனம் எடுத்துப் பாடம் நடத்துவார்கள் என நம் நாட்டில் பொதுவே ஒரு நம்பிக்கை இருக்கிறது...
ஆனால் இது உண்மையன்று. பொதுமக்களின் பொதுவான இந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் பர்கிட்மாநகரம் எனும் கிராமத்தின் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
அந்த ஊர் மக்களுடன் ஒன்றி, மாணவர்களுக்குக் கவலையுடனும் சிறப்பு கவனத்துடனும் பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள்.
அவர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் பற்றிய ஒரு காணொளி இது.