முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

ஆபிரகாம் லிங்கனின் தன்னம்பிக்கை


அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் நாம் அனைவரும் சொர்க்கம் செல்பதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்று போதனை செய்தார். அவர்தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத்தவிர.

உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் தொன் செல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் சொர்க்கத்தையும் விரும்பவில்லை. நரகத்தையிம் விரும்பவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா என்று கூறினார். அந்த சிறுவனோ அமைதியாக இங்கே கறுப்பு இன மக்கனை நாயைவிட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியான இருக்கும் என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான்.
அந்த சிறுவன் தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். அவரை போன்று ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.