மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டித் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. விண்ணப்பங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் பெறலாம்.
போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள். மேலும் 7ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களை பெற www.dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.