முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான  காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே காலத்தில் 2011-12 நிதி ஆண்டில் சதவீதம் 8.25 சதவீதமாகவும், அதற்கு முன், 2010-11 ஆண்டில் 9.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதே வட்டிவிகிதம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் இந்த வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.