முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

   இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் வ. ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் இளநிலை கல்வியியல் (பி.எட்.) படிப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர விரும்புவோர் உடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அக்டோபர் 7-ம் தேதிக்குள் தொலைநிலைக் கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அக்.14-ம் தேதி நடைபெறும். தொடர்புக்கு 0431-240704, 0431-2407027.