மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பாடநூல் கழகத்தின் சார்பில் ஆய்வுக்கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் அனைத்து மாவட்டகல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர். மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளை கண்காணிக்கும் ஐ.எம்.எஸ்., எனப்படும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்காமல் தவிர்த்த தென்மாவட்டங்களை சேர்ந்த மூன்று மாவட்ட மெட்ரிக் கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. இவர்கள் மூவர் மீதும் அந்தந்த மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் தந்த ஊழல் புகார்களின் அடிப்படையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருப்பினும் சென்னையில் கல்வித்துறை உயர்அதிகாரிகளை சந்தித்து உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கைகளுக்கு "பரிகாரம்' தேடிக்கொண்டதால் அவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளனர் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. - தினமலர்