வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வதந்தி கிளம்பியதை அடுத்து பல்க்காக எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறையை மத்திய அரசு 15 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
அசாம் கலவரத்தை அடுத்து இந்தியா முழுவதும் வாழும் வட மாநிலத்தவர்களை குறி வைத்து தாக்குதல் நடக்கும் என்ற தகவல் குறிப்பாக மகாராஷட்டரா, ஒடிசா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டது. இதனையடுத்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு கிளம்பியபடி உள்ளனர்.
லோக்சபாவில் எதிர்கட்சியினர் விவாதம் :
இது தொடர்பாக லோக்சபாவில் எதிர்கட்சியினர் இந்த பிரச்னையை எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் அரசின் செயல்பாட்டை குறை கூறினர். தொடர்ந்து விளக்கம் அளித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தஙகள் விளக்கவுரையில்; இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். சர்வதேச அளவிலான தொடர்பு இருப்பதாகவும் விசாரிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒட்டு மொத்தமாக ( பல்க் மெசேஜ் ) அனுப்புவதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த உத்தரவு 15 நாள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் 3 முதல் 5 எஸ்.எம்.எஸ்.,வரை அனுப்பிட இயலும். 25 கே அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது போல் எம்,எம்,எஸ்.,களும் பல்க்காக அனுப்ப முடியாது. உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.