ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், சென்னை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் திரு .மதிவாணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை விடப்படுகிறது.இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 8ம் தேதி அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
விடுமுறை அறிவிக்கப்பட்ட 29ம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட அளவு ஊழியர்களோடு செயல்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன் அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன்கிழமை அன்றுசென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 15.09.2012 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பணிநாளாகும்.