முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பள்ளி - நடப்பு கல்வியாண்டில் மொத்த நாட்கள் 210


நடப்பு கல்வியாண்டில் மொத்த நாட்கள் 210; உள்ளூர் விடுமுறைக்கு அனுமதிக்கப்படும் நாட்கள் 3; தேர்வு நடத்த வேண்டிய நாட்கள் 24; பள்ளி செயல்பட வேண்டிய மொத்த நாட்கள் (உள்ளூர் விடுமுறை தவிர) 207 நாட்கள்; வகுப்பு நடத்த வேண்டிய நாட்கள் (தேர்வு நாட்கள் தவிர) 183 நாட்கள்
ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இம்மாதம் சனி, ஞாயிறு தவிர்த்து 21 நாட்கள் பள்ளி செயல்படும்; ஜூலையில் 22 நாட்கள்; ஆக., 21 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். செப்., 12 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு; 6 முதல் 8ம் வகுப்பு முதல் பருவத்தேர்வுகள் துவங்கும். அம்மாதம் 22ல் தேர்வு நிறைவடைந்ததும், 23 முதல் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை.அக்., 3ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்; காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, பக்ரீத் பண்டிகை விடுமுறை தவிர, மொத்தம் 19 நாட்கள் பள்ளி செயல்படும். நவ., மாதத்தில் சனி, ஞாயிறு தவிர 13ம் தேதி தீபாவளி, 25ல் மொகரம் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது; மொத்தம் 21 நாட்கள் செயல்படும்.டிச., மாதம் 14ம் தேதி பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு; 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வு துவங்கும். 22ல் தேர்வு முடிவடைந்து, டிச., 23 முதல் 2013 ஜன., 1 வரை 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை. ஜன., 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்; 19 நாட்கள் செயல்படும். பிப்., மாதம் சனி, ஞாயிறு தினங்கள் தவிர, 20 நாட்கள் பள்ளி செயல்படும். மார்ச் 11ல் பிளஸ் 1 தேர்வு துவங்கி, 22ம் தேதி நிறைவடையும். இம்மாதம் 25ல் ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு துவங்கும். ஏப்., மாதம் 10ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு துவங்கி, 20ல் நிறைவடையும். அனைத்து தேர்வும் நிறை வடைந்து, ஏப்., 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் மொத்த நாட்கள் 210; உள்ளூர் விடுமுறைக்கு அனுமதிக்கப்படும் நாட்கள் 3; தேர்வு நடத்த வேண்டிய நாட்கள் 24; பள்ளி செயல்பட வேண்டிய மொத்த நாட்கள் (உள்ளூர் விடுமுறை தவிர) 207 நாட்கள்; வகுப்பு நடத்த வேண்டிய நாட்கள் (தேர்வு நாட்கள் தவிர) 183 நாட்கள், என, பள்ளி காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.