முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

வேலை வாய்ப்பு தகவல்கள்

 பி.ஐ.எஸ். நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணி
சென்னையில் இயங்கி வரும் பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (Bureau of Indian standards) நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், அக்ரிகல்சுரல், ஃபுட் டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ-டெக்னாலஜி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 97
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2013
விவரங்களுக்கு: www.bis.org.in



 ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் 245 ஜூனியர் அசிஸ்டெண்ட் பணி
சென்னையில் இயங்கி வரும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபயர் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
காலியிடங்கள்: 245
சம்பளம்: ரூ.12,500-ரூ.28,500/-
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  
The Regional Executive Director, Airports Authority of India, Southern Region, Chennai-600027.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2013
விவரங்களுக்கு: www.aai.aero

 எல்லைப் பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டெண்ட் பணி
எல்லைப் பாதுகாப்புப் படையில் Assistant Commandants பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெரைன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2013
விவரங்களுக்கு: www.bsf.nic.in

 எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஃபைனான்ஷியல் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ் பணி
சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஃபைனான்ஷியல் சர்வீஸ் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
காலியிடங்கள்: சென்னை-1-  19, சென்னை-2 - 06, கோவை - 09, மதுரை - 16, சேலம் - 10, தஞ்சாவூர் - 12, திருநெல்வேலி - 19, வேலூர் - 08
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2013
விவரங்களுக்கு:  www.licindia.in/pages/LIC_FSEs_notification.pdf>

 என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
தில்லியில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ. அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதவியல், இயற்பியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் எம்.எஸ்சி. படித்தவர்கள் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.05.2013
விவரங்களுக்கு: www.nielit.in

 டெல்லி மெட்ரோ ரயிலில் 153 ஜூனியர் என்ஜினீயர் பணி
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2013
விவரங்களுக்கு: www.delhimetrorail.com

 எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்ஷன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பணி
சென்னை, டெல்லி, மும்பை, கொச்சி, கொல்கத்தா ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வரும் எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்ஷன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் கிளார்க் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஒரு நிமிடத்தில் 30 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.5,200 - 20,200
காலியிடங்கள்: 12
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2013
விவரங்களுக்கு: www.eicindia.gov.in