முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் -அறிவிப்பு .


இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 2012 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவிப்பு .

ஏப்ரல்  2012 –ல் நடைபெற்று முடிந்த இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்,  04.06.2012 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படும். சில நிர்வாகக் காரணங்களுக்காக,  இதுவரை,  தேர்வுமுடிவுகள் வெளியிடும் முன்பாக,  முதல்நாள் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் மதிப்பெண்கள் பதியப்பட்ட குறுந்தகடுகள் (TML and CD) ஆகியவை வழங்குதல் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்.


        அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேசிய தகவலியல் மையத்திற்கு National Informatics Centre) பொறுப்புவாய்ந்த அலுவலர் ஒருவரை அதிகாரமளிப்பு கடிதம்  (Authorisation letter)  மற்றும் குறுந்தகடு ஒன்றுடன் (CD) அனுப்பி வைத்து தங்கள் மாவட்டத்திற்கு உரிய பள்ளிகளின் தேர்வு முடிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

        மேலும், கணினி வசதிகள் கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கூடுதல் விவரங்களைப் பதிய 18.05.2012 வரை உபயோகித்து வந்த User id மற்றும் Password ஆகியவற்றைக் கொண்டு  http://peps.tn.nic.in என்ற வலை வழி (Portal) மூலமாக  தேர்வு முடிவுகளை பள்ளியில் உள்ள கணினி மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  
        கணினி வசதி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும் கணினி வசதி கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிகளின்  User id மற்றும் Password  ஆகியவற்றைக் கொண்டு தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.