பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, கணிதப்பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு 12 ஆயிரத்து 532 பேர் நூறு சதவீத மதிப்பெண் எடுத்திருந்தனர். ஆனால், சமச்சீர் கல்வி திட்டத்தில், இந்தாண்டு ஆயிரத்து 141 பேர் மட்டுமே கணிதப்பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
‘புத்தகத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன, என்றபோதிலும் ஒரு மதிப்பெண் பிரிவில் கேள்விகள் கேட்கப்பட்ட விதம் சற்று கடினமாக அமைந்திருந்ததே முழு மதிப்பெண் பெற முடியாததற்கு முக்கிய காரணம்’ என்று மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.