முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

சமச்சீர் கல்வி: ராமேஸ்வரத்தில் ம.பி., கல்வித்துறையினர் முகாம்


 மத்திய பிரதேசத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக, அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் படித்த, அரசு பள்ளியில் நடத்தப்படும், சமச்சீர் கல்வி முறை குறித்து கேட்டறிந்தனர்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியால்மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்,புத்தகம்தனி அட்டையில் படம் விளக்கத்துடன்செயல்விளக்க பாட திட்டம் மாணவர்களிடம் நல்லவரவேற்பு பெற்றுள்ளது.
இந்தப் பாட முறையைமத்திய பிரதேசம் துவக்கநடுநிலைப் பள்ளியில் செயல்படுத்திடஅம்மாநில அரசுஆலோசித்ததுஅதன்படிஅம்மாநில அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி துறையின் இயக்குனர்ஜாகித் ஜெயின்கூடுதல் இயக்குனர் .பிசர்மா தலைமையில், 20 பேர் தமிழகம் வந்தனர்.
இதில் ஒரு குழுவினர்ராமேஸ்வரத்தில்முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்தமண்டபம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1ல்சமச்சீர் கல்வி செயல்முறை பாடங்களை கற்பிக்கும் முறை குறித்துஆசிரியர்களிடமும் மற்றும் புரியும் திறன் குறித்து மாணவர்களிடமும் கேட்டறிந்தனர்.
இது குறித்து .பி., கல்விக்குழு உறுப்பினர் முகேஷ் மால்விக் கூறியதாவதுதமிழகத்தில் துவக்க,நடுநிலைப் பள்ளியில் அமல்படுத்தப்பட்டசமச்சீர் கல்வி மற்றும் படத்துடன்செயல்விளக்க கல்விமுறைகுறித்துஆச்சரியப்பட வைக்கிறது.
இப்பாட முறைமாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளதுமதுரைராமநாதபுரம் மாவட்டத்தில்,இரு தினங்களாக ஆய்வு செய்தோம்இக்கல்வி முறையைஎங்கள் மாநில பள்ளிகளில் அமல்படுத்த,அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.