முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு


தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவதுமெட்ரிக் பள்ளிகள்இயக்குனரகத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து மெட்ரிக்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கானமாணவர்கள் சேர்க்கைமே மாதத்திற்கு முன் மேற்கொள்ளக்கூடாது.
சில பள்ளிகள் டிசம்பர் முதல் சேர்க்கை நடத்துவதாக தெரிகிறது.இதுகுறித்து ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளதுபள்ளி நிர்வாகங்கள்இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
விதிமுறைக்கு முரணாக செயல்படும் பள்ளிகள் மீது நேரடி கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படும்.ஒவ்வொரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும் இதுதொடர்பான அறிவிப்பு வைக்க வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.