முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி


 புதிதாக தேர்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்குகடந்தமாதம், 13ம் தேதிசென்னையில் நடந்த விழாவில்தேர்வுபெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டனஇதைத் தொடர்ந்து,பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும்நேற்று நடந்தது.
2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும், 2,273பணியிடங்கள் மட்டும்நேற்று நிரப்பப்பட்டனமாவட்டத்திற்குள்பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வுகாலையிலும்வெளிமாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வுபிற்பகலிலும் நடந்தன.
மொத்த தேர்வர்களில், 1,600 பேர்அவரவர் சொந்த மாவட்டங்களில்பணி நியமன உத்தரவுகளைபெற்றனர்மீதமிருந்த, 673 பேர் மட்டும்சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால்,வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் இருந்து, 50 பேர் தேர்வு பெற்றிருந்தனர்ஆனால், 18 இடங்கள் மட்டுமே காலியாகஇருந்தனஇதனால், 32 பேர்காஞ்சிபுரம்திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை,தேர்வு செய்தனர்பணி நியமன உத்தரவுகளை பெற்ற அனைவரும்நாளை பணியில் சேர வேண்டும் எனகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.