தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை (06.12.2012) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தின் போது 22.11.2012ல் நடைபெற்ற பேரணி மற்றும் 05.01.2013 ல் நடைபெற உள்ள ஒரு நாள் தொடர் முழக்க போராட்டம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. முன்னதாக காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.