முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அடுத்த ஆண்டில் இருந்து 9ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி

""முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டம், அடுத்த கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கு நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி பேசியதாவது:கல்வி மேம்பாட்டிற்காக, தமிழக முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக, 15 அரசாணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.