முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பேருந்தில் தொங்கியபடி பயணம்: 8ம் வகுப்பு மாணவன் பலி


 தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி, பயணம் செய்த பள்ளி மாணவன், கை வழுக்கி கீழே விழுந்து இறந்தார். இதுபோன்ற சம்பங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குச்சனூரில் இருந்து, தேனி நோக்கி புறப்பட்ட அரசு பஸ், 8.30 மணிக்கு முத்துதேவன்பட்டிக்கு நேற்று காலை வந்தது. பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் தினேஷ், (வயது 13) இந்த பேருந்தில் ஏறினார். இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவன் தினேஷ், முன்பக்க படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தார்.  பழனிசெட்டிபட்டி "வாட்டர் டேங்க்&' அருகே பேருந்து வந்த போது, தினேஷ் கை வழுக்கியது. தவறி கீழே விழுந்த தினேஷ் தலையில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார், டிரைவர் வடிவேலுவிடம் விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவர்கள், அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.