சென்னை பல்கலை பணியாளர் பயிற்சி கல்லூரி, இதுவரை 20,000 கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை பல்கலை கல்வி பணியாளர் கல்லூரி இயக்குனர் (பொறுப்பு) கோதண்டராமன் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர் பயிற்சி, பட்டதாரி ஆசிரியர் பயிற்சிகள் முடிந்த பிறகே, பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது. ஆனால், கல்லூரிகளில் எந்தவித பயிற்சியும் இல்லாமல், நேரடியாக ஆசிரியராக சேருகின்றனர்.
முறையான பயிற்சி இல்லாத காரணத்தால், மாணவர்கள் கவனிக்கும் வகையில் வகுப்புகள் எடுப்பது, மாணவர்களுடன் பழகும் முறை தெரியாமல் போகிறது. இதை போக்கும் வகையில், பணியாளர் கல்லூரி செயல்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில், 20,000 ஆசிரியர்கள் இக்கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு கோதண்டராமன் கூறினார்.