முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது.


கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது.
"டிடி' வேண்டும்:அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 7,500 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 8,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 

இதில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலகத்தில் இருந்து, எந்த காரணமும் தெரிவிக்காமல், அனைத்து பள்ளிகளும் வளர்ச்சி நிதியில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மெட்டீரியல்ஸ் பேங்க்' என்ற பெயருக்கு, தலா, 2,000 ரூபாய், "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும்' என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு: இதனால், 35 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், "டிடி' எடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், மாநில திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். எந்த தகவலும் கூறாமல், "டிடி' அனுப்ப சொன்னதால், தலைமை ஆசிரியர்கள், கிராம கல்வி குழுவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. 


மேலும், "கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தமிழகத்திலேயே கிடைக்கும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?' என்றும், எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து, "தினமலர்' இதழில் செய்தி வெளியானது. 

இந்நிலையில், மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும், "மைசூரு நிறுவனத்துக்கு வழங்க எடுத்த, "டிடி'யை அனுப்ப வேண்டாம்; நிறுத்தி வையுங்கள்' என, தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் அனுப்பியிருந்தால், அது திரும்ப உங்களுக்கே அனுப்பி வைக்கப்படும் என, மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, தகவல் தெரிவிக்கப்பட்டது' என்றார்.