வணிக வரி, பதிவு மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த, சி.வி.சண்முகத்திற்கு, "கல்தா' கொடுக்கப்பட்டுள் ளது.அடுத்தடுத்த புகார்கள் காரணமாக, சி.வி.சண்முகத்தை, அமைச்சரவை மற்றும் மாவட்டச் செயலர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். அவரிடம் இருந்த துறைகளில், வணிக வரி மற்றும் பதிவுத் துறை, ரமணாவிற்கும், சட்டம் மற்றும் சிறைத் துறை, சிவபதிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இது தவிர, சட்டசபை கொறடா மோகன், ஊரக தொழில் துறை அமைச்சராகிறார். அமைச்சர் வளர்மதிக்கு கூடுதல் பொறுப்பும், எம்.சி.சம்பத்துக்கு இலாகா மாற்றமும் நடந்துள்ளது.