முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் பாரிமுனை இடத்திற்கு மாற்றம்

சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி முதல், பாரிமுனையில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது.
வணிக வரித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த தேர்வாணையத்திற்கு, பாரிமுனை, பல் மருத்துவக் கல்லூரிக்கு பக்கத்தில், புதிய கட்டடம் கட்ட, முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆறு தளங்களுடன், 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில், 20 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதை, கடந்த மாதம், 27ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் பல்வேறு பிரிவுகள், ஒவ்வொன்றாக, புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அனைத்துப் பிரிவுகளும் மாற்றப்பட்டு விட்டன. எனவே, 15ம் தேதியில் இருந்து, புதிய இடத்தில், தேர்வாணையம் முழுமையாக இயங்க உள்ளது. குரூப்-2 தேர்வுக்கான, பணி நியமன ஒதுக்கீட்டு கலந்தாய்வு, புதிய இடத்தில், முதல் நிகழ்ச்சியாக நடக்கிறது. பாரிமுனை பஸ் நிலையத்திற்கு அருகிலும், கோட்டை ரயில் நிலையத்திற்கு மிக அருகிலும், தேர்வாணைய அலுவலகம் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் தேர்வர்கள், எளிதில் சென்று வரலாம்.