முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

விடுதியில் தங்கி பயிலும் பிற்பட்ட / மிகவும் பிற்பட்ட மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி - முதல்வர் உத்தரவு

click here for[Press Release No.586]( Free training in spoken English sponsored) 

பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்‌சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க ட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 160 விடுதிகளில் 6,550 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ 2,800 வீதம் ரூ.1.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆங்கிலப்பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மேலும் சிறுபான்மையின மாணவர்களில் 10- ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொ‌கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.