தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இரு நாட்களில் நிரப்பப்பட்டன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைmaiசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சாமி சத்தியமூர்த்தி நேற்று கூறியதாவது: மாநிலத்தில் 2,750 உயர்நிலை பள்ளிகளும், 2,200 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 700 தலைமை aaசிரியர்கள் பணியிடங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவே இருந்தன.
ஆண்டுதோறும், பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டாலும் 700 காலிப்பணியிடங்கள் என்ற எண்ணிக்கை இருந்து கொண்டே இருந்தது. இதை சுட்டிகாட்டி, "தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியாகின.
இதையடுத்து சிறப்பு முயற்சி மேற்கொண்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள், "ஆன்லைன் கவுன்சிலிங்' மூலம், 475 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 145 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளனர். இதனால், ஆசிரியர்களுக்கு நேரம் மற்றும் பணம் விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்றார்.