முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு: 3-வது வாரத்தில் கலந்தாய்வு

தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவு திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கான துறை ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயசந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இளநிலை உதவியாளர், தட்டச்சர்,பில் கலெக்டர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4-ன் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவில் 10ஆயிரத்து 718 காலியிடங்கள் இருந்தன. அவற்றை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது. 10 லட்சம் பேர் எழுதினர்: குரூப் 4 தேர்வை 10 லட்சத்து 34 ஆயிரத்து 421 பேர் எழுதினர். டி.என்.பி.எஸ்.சி. மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட 10 ஆயிரத்து 718 காலியிடங்களில் 10 ஆயிரத்து 216 இடங்களுக்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்தது. குரூப் 4 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன. 10 ஆயிரத்து 216 பணியிடங்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களில் (www.tnpsc.gov.in, www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்களுக்கான முடிவுகள் அரசின் பணியாளர் குழுமத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வெளியிடப்படும். 3-வது வாரத்தில் கலந்தாய்வு: தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட கல்வித் தகுதி மற்றும் ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்களின் நகல்களை தேர்வாணைய இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான துறை ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுஅக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். கலந்தாய்வு வெளிப்படையாகவும், தரவரிசையின் அடிப்படையிலும் நடத்தப்படும். திட்டமிட்டபடி முடிவுகள்: எழுத்துத் தேர்வு மட்டுமே உள்ள தேர்வுகளுக்கான முடிவுகள் அந்தத் தேர்வுகள் முடிந்த மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கப்படும் என்ற தேர்வாணையத்தின் திட்டப்படி இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.